பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் - அரசு உத்தரவு

x

விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளருக்கு 75 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்பட்டு, அதற்கான கட்டணம் அரசிடம் இருந்து நிலுவையின்றி பெறப்படுகிறது. அதிநவீன சொகுசு பேருந்து மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில், இருக்கையில் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணிக்க அனுமதிப்பதில்லை என்று புகார் வந்தது. இதனிடையே, மாற்றுத்திறனாளிகளிடம் அன்பாக நடந்து கொள்வதுடன், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டால், பேருந்து நிலைய பொறுப்பாளர் அல்லது நேரக் காப்பாளரிடம் தெரிவித்து தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்