காதலிப்பதாக கூறி பணம் கேட்டு டார்ச்சர்...போதை இளைஞரை தாக்கிய திருநங்கைகள்...

x

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது செங்கம் புதிய பேருந்து நிலையம். அன்றிரவு பேருந்துக்கு காத்திருந்த பொதுமக்கள் அந்த அடிதடி சண்டையால் அதிர்ந்து போயிருக்கிறார்கள். சட்டையில்லமால் சண்டைக்கு நின்ற லோ பட்ஜெட் ப்ரூஸ் லீயை, பேருந்து நிலையத்தில் இருந்த மொத்த திருநங்கைகளும் ஒன்று கூடி துரத்தி துரத்தி அடித்திருக்கிறார்கள். கல், கட்டை, குச்சி என கையில் கிடைத்த எல்லாவற்றையும் கொண்டு அந்த தாக்குதல் நடந்திருக்கிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த இளைஞரை மீட்டு வண்டியில் ஏற்றியிருக்கிறார்கள்.

யார் இந்த ப்ரூஸ் லீ.? ஏனிந்த தாக்குதல்..? என்ன நடந்தது? போன்ற கேள்விகளுக்கு விடைதேடி காவல்துறையினர் விசாரனையை தொடங்கி இருக்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டம் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். கஞ்சா போதைக்கு அடிமையான இவர் வேலை வெட்டி எதுக்கும் போகாமல், வெட்டிய பொழுதை கழித்து வந்திருக்கிறார். விக்னேஷ்க்கு செங்கம் பகுதியில் இருக்கும் சுஜாதா என்ற திருநங்கையுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. செங்கம் புதிய பேருந்து நிலையத்தில, யாசகம் பெற்று பிழைப்பு நடந்தி வந்திருக்கிறார் திருநங்கை சுஜாதா.

சுஜாதாவை காதலிப்பதாக கூறி, ஒரு வருட காலமாக நெருங்கி பழகி வந்திருக்கிறார் விக்னேஷ். நாளடைவில் சுஜாதா யாசகம் பெற்று சம்பாதித்த பணத்தை பிடிங்கி கஞ்சா வாங்கி அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் விக்னேஷ். தினமும் இந்த கஞ்சா வேட்டை தொடர்ந்தால் கடுப்பான சுஜாதா விக்னேஷூக்கு பணம் கொடுக்க மறுத்திருக்கிறார். உடனே அவருக்கு அடித்து உதைத்து விக்னேஷ் சித்தரவதை செய்ததாக சொல்லப்படுகிறது. சம்பவத்தன்று தலைக்கேறிய கஞ்சா போதையில், செங்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த விக்னேஷ், சுஜாதாவிடம் கஞ்சா வாங்க பணம் கேட்டு வழக்கம் போல வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

சுஜாதா தன்னிடம் பணம் இல்லையென கூறியிருக்கிறார். அரக்கனாக மாறிய விக்னேஷ், சுஜாதாவின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி அடித்து சரமாரியாக உதைத்திருக்கிறார். இதனை கண்ட சக திருநங்கைகள் ஒன்று கூடி விக்னேஷை தட்டி கேட்டிருக்கிறார்கள். இறுதியில் அது அடிதடியில் முடிந்திருக்கிறது. கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் வைத்து விக்னேஷ துரத்தி துரத்தி அடித்து வெளுத்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கஞ்சா போதையில் இருந்த விக்னேஷை, திருநங்கைகளிடம் இருந்து மீட்டிருக்கிறார்கள். போலீசாரையும் பொருட்படுத்தாமல், திருநங்கைகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். அவர்களை தடுத்த காவல்துறையினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விக்னேஷை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்