ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகள்.. இந்திய ரயில்வேயில் இவ்ளோ கோடி வருமானமா..? வாயை பிளக்க வைக்கும் வசூல்

x
  • கடந்த 3 ஆண்டுகளில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்ய விதிக்கப்பட்ட கட்டணங்கள் மூலம் இந்திய ரயில்வே துறை, ஆயிரத்து 949 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
  • 2020 ஏப்ரல் முதல் 2022 டிசம்பர் வரையில், ஆன்லைன் மூலமும், டிக்கெட் கவுன்டர்கள் மூலமும் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்கள் முலம் இந்த தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
  • 2021-2இல் ஆன்லைன் மற்றும் டிக்கெட் கவுன்ட்ர்கள் மூலம் அதிகபட்சமாக 694 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
  • குளிர் பதன வசதி கொண்ட பிரிவுகளுக்கு 30 ரூபாயும், குளிர் பதன வசதி இல்லாத பிரிவுகளுக்கு 15 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
  • தற்போது இணையம் மூலம் நிமிடத்திற்கு 25 ஆயிரம் டிக்கெட்களை வாங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
  • இதை நிமிடத்திற்கு 2.25 லட்சம் டிக்கெட்களாக அதிகரிக்கச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்