தமிழக பாகன்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி... அரசு உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

x

தமிழகத்தில் யானைகள் முகாம்களில் உள்ள பாகன்களை, தாய்லாந்துக்கு பயிற்சி பெற அனுப்பி வைப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பாகன்கள், வனச்சரகர்களை தாய்லாந்தில் செயல்பட்டு வரும் யானைகள் பாதுகாப்பு மையத்தில் பயிற்சி பெற தமிழக அரசு முடிவு செய்து, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது.

இதை ரத்து செய்யக் கோரி, வனவிலங்கு ஆர்வலர் முரளிதரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், யானைகளை அடக்குவதிலும், பயிற்சி அளிப்பதிலும் திறமை வாய்ந்தவர்கள் தமிழகத்தில் உள்ள நிலையில், தாய்லாந்துக்கு பயிற்சி பெற அனுமதிப்பது தேவையற்றது என குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்