சென்ட்ரலில் 8 முதல் 11 Platform-களில் ரயில் சேவை ரத்து

x

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகையை ஒட்டி 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பத்தாவது நடைமேடையில் இருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதால் 10,11, 9 ,8 ஆகிய நான்கு நடைமேடைகளிலும் ரயில் சேவைகள் இயக்கப்படுவது நிறுத்தப்படுகிறது. வந்தே பாரத் ரயில் இயக்க கூடிய 11 வது பிளாட்பார்ம் அருகே புறநகர் ரயில் செல்லக்கூடிய பாதை உள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக புறநகர் ரயிலுக்கும், சென்னை சென்ட்ரலில் உள்ள ரயிலுக்கும் இடையே, காலி பெட்டிகளை கொண்ட ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்