போலீசாருக்கு கால் செய்த ரயில் பயணி ..திடீர் பரபரப்பான கோவை எக்ஸ்பிரஸ் - நடந்தது என்ன?

x

மதுரையில் சக பயணியுடன் ஏற்பட்ட தகராறில், ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.கோயம்புத்தூரில் இருந்து மதுரை வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மர்மநபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் ரயில் மதுரை வந்தடைந்ததும், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிடைக்கப்பெற்ற தகவல் வதந்தி என்பதை அறிந்த போலீசார், தகவலளித்த மேலூரை சேர்ந்த போஸ் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், போஸ் அதே ரயிலில் பயணம் செய்ததும், சக பயணியுடன் ஏற்பட்ட தகராறில் இவ்வாறு தகவலளித்து மிரட்டியதும் தெரிய வர, போஸை போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்