பெண் கைதி கையில் விலங்கை மாட்டிகாரை தண்டாவளத்தில் விட்டு ஓடிய போலீஸ் அடித்து தூக்கிய ரயில்..

x

அமெரிக்காவின் கொலராடோவில் கைது செய்யப்பட்ட பெண்ணுடன் தண்டவாளத்தில் நின்ற போலீஸ் கார், ரயில் மோதி விபத்துக்குள்ளானது.

ரயில்வே தண்டவாளத்தின் அருகே ஒருவர் துப்பாக்கியை வைத்து மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதனால் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ரியோஸ்-கோன்சலஸ் என்ற பெண்ணை கைது செய்து கைவிலங்கிட்டு காரில் ஏற்றி அழைத்து சென்றனர்.

இந்நிலையில் ரியோஸின் காரை சோதனையிட முடிவெடுத்த போலீசார், அவரை காரில் விட்டு இறங்கி சென்றுள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த ரயில், போலீஸ் கார் மீது மோதிய வீடியோ பதிவு தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்