சென்னையில் ரயில் தாமதம் - காரணம் என்ன..?
சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஆந்திர மாநிலம் பித்ரகுண்டாவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில், என்ஜின் பழுது காரணமாக, கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதனால், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து, என்ஜினில் ஏற்பட்ட பழுதை ரயில்வே ஊழியர்கள் சரி செய்த பிறகு, அந்த ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சென்ற அனைத்து ரயில்களும் 30 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டன. இதன் காரணமாக, பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
Next Story
