ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் 32 பேர் கடத்தல்... AK-47 ஏந்திய கும்பல் துணிகரம்... அச்சத்தில் உறைந்த மக்கள்

x

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் 32 பேர் கடத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நைஜீரியாவின் தெற்கு எடோ மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ஏகே-47 துப்பாக்கிகள் தாங்கிய மர்ம நபர்கள் பிணைக்கைதிகளாக மக்களைக் கடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி மாதம் அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டு அரசாங்கத்திற்கு இது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான நைஜீரியாவின் ஒவ்வொரு மூலையிலும் பரவி வரும் பாதுகாப்பின்மைக்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.


Next Story

மேலும் செய்திகள்