திருமணமான 3வது நாளில் விபரீத முடிவு....ராணுவ வீர‌ர் தூக்குப்போட்டு தற்கொலை.

x

குமரி மாவட்டம் கருங்கல் அருகே திருமணமான 3-வது நாளில் ராணுவ வீரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூட்டேற்றி பகுதியை சேர்ந்த சுபின் 10 ஆண்டுகளாக எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு, கடந்த 14ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவத்துள்ளனர். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்