செல்போனுக்கு சார்ஜ் போடும்போது விபரீதம்... அடுத்த நொடியே பாய்ந்த மின்சாரம் - பலியான இளைஞர்

x

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே செல்போனுக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பட்டதாரி இளைஞர் உயிரிழந்தார். குமாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் தங்கராஜ், வீட்டில் தனது செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்காக சுவிட்ச்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மீது மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்டதில் தங்கராஜ் பலத்த காயமடைந்தார். அவரை அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்