இலங்கையை சூழ்ந்த சோகம் - ஆற்றில் கவிழ்ந்த தனியார் பேருந்து - மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரம்

இலங்கையில் உள்ள கதுருவெலயில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பொலநறுவை அருகே சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தின் மீது மோதி மகாவலி ஆற்றில் விழுந்து. விபத்தை நேரில் கண்டவர்கள், உடனடியாக மீட்புப்படைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த மீட்புபடையினர், 41 பேரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில், பொலனறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com