ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷவண்டு கடித்து பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு நேர்ந்த சோகம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இந்திராகாந்தி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தனது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை பார்க்க சென்றபோது, அவரை விஷவண்டு கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இந்திராகாந்தி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com