சிக்னலில் அலட்சியமாக பைக்கை திருப்பிய நபர்.. அடித்து தூக்கி வீசிய அசுர வேக கார்

x

கனியாமூரில் பைக் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், மாதவசேரி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் நேற்று, காலை கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்னை-சேலம் நெடுஞ்சாலையை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்றார். அப்போது, வெங்கடேசன் என்பவர் ஓட்டி வந்த கார், முத்துசாமி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்