டிராபிக்கில் புது மனைவியை விட்டு காதலியுடன் போன் பேச சென்ற கணவன்-அப்படியே எஸ்கேப் ஆனதால் மனைவி ஷாக்

x
  • பெங்களூரூ அருகே போக்குவரத்து நெரிசலை பயன்படுத்தி புது மனைவியை கைவிட்டு , புது மாப்பிள்ளை தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி பெங்களூரில் உள்ள தேவாலயத்திற்கு சென்று விட்டு சிக்கபல்லாபுரா திரும்பிக் கொண்டிருந்த போது பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசலில் புது மண தம்பதியினரின் வாகனம் சிக்கியுள்ளது.
  • அதே நேரத்தில் கோவாவில் இருந்து அவரது காதலி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளார்.
  • இதற்காக காரை விட்டு கீழே இறங்கி செல்போனில் பேச சென்ற புது மாப்பிள்ளை, அதன்பிறகு திரும்பவில்லை.
  • இது குறித்து, அந்த பெண், சிக்கபள்ளாபுரா காவல் நிலையத்தில் தனது புகார் அளித்துள்ளார்.
  • அந்தப் புகாரில் திருமணத்திற்கு முன் கணவருக்கு கோவாவில் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், திருமணமான மறுநாளே கோவாவை சேர்ந்த அந்த பெண் தனது கணவரின் செல்போனுக்கு இருவரும் அந்தரங்கமாக இருக்கும் புகைப்படங்களை அனுப்பி மிரட்டியதாக கூறப்பட்டுள்ளது.
  • இதனால் தமது கணவர் பயந்து தன்னை விட்டுச் சென்றதாகவும் அவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் இருந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
  • போக்குவரத்து நெரிசலை பயன்படுத்தி புது மனைவிக்கு, கணவன் கம்பி நீட்டி உள்ளதாக செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்