Vlog செய்பவர்களே உஷார்.. யூடியூபரை விடாமல் விரட்டிய வியாபாரி..தலை தெறிக்க ஓடிய யூடியூபர்

Vlog செய்பவர்களே உஷார்.. யூடியூபரை விடாமல் விரட்டிய வியாபாரி..தலை தெறிக்க ஓடிய யூடியூபர்
Published on

பெங்களூரு சிக்கபேட்டை மார்க்கெட் பகுதியில், வாரந்தோறும் சந்தை நடைபெறுவது வழக்கம். இதனை, நெதர்லாந்தை சேர்ந்த யூடியூபரான பெட்ரோ மோட்டோ என்பவர், தனது யூடியூப் வலைதளத்திற்கு வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர், வீடியோ பதிவுக்கு ஆட்சேபனை தெரிவித்ததுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணி என்றும் பாராமல், அவரது கையை பிடித்துக்கொண்டு அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து, இந்த விவகாரத்தை சமூக வலைதள புகாராக எடுத்துக்கொண்டு, அத்துமீறலில் ஈடுபட்ட வியாபாரி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com