தான் ஓட்டி வந்த டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் தலை நசுங்கி பலி

x

தான் ஓட்டி வந்த டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் தலை நசுங்கி பலி

மன்னார்குடியில் டிராக்டர் மோதியதில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கீழ நிம்மேலி கிராமத்தை உதயசூரியன் என்பவரின் இரண்டாவது மகன் சுவேதன். அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறை என்பதால், வீட்டில் இருந்து டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். கீழ நெம்மேலி பாலத்தில் டிராக்டரை நிறுத்திவிட்டு கடைக்கு செல்வதற்காக கீழே இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக டிராக்டர், சுவேதன் மீது ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்