மலை ரயிலை வாடகைக்கு எடுத்து இங்கிலாந்து சுற்றுலாப்பயணிகள் என்ஜாய்

x

இங்கிலாந்தை சேர்ந்த 16 சுற்றுலாப்பயணிகள் மூன்றரை லட்ச ரூபாய்க்கும் அதிகமாக கட்டணம் கட்டி நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்தனர். அழகிய இயற்கை காட்சிகள்... காட்டு விலங்குகளைக் கண்டு ரசித்துக் கொண்டே ரயில் பயணத்தை அனுபவிக்க இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவினர் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி காலை 10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்டு பிற்பகல் ஒன்றரை மணிக்கு குன்னுார் ரயில் நிலையத்திற்கு சென்றடைந்தனர். அங்கு மலை ரயிலின் லோகோ பணிமனையினைப் பார்வையிட்ட அவர்கள், நுாற்றாண்டு பழமை மிக்க நீராவி என்ஜின் இயக்கத்தை பற்றி கேட்டறிந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்