கொடிவேரி அணையில் குவியும் சுற்றுலா பயணிகள்.. "பாத்ரூம்கள் இல்லை பெண்கள் பெரும் சிரமம்" - அடுக்கடுக்காய் அள்ளிவீசிய குறைகள்

ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடிவேரி அணையில், கழிவறை, உடை மாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விடுமுறை நாட்கள் காரணமாகவும், கோடை வெயிலை சமாளிக்கவும், கொடிவேரி அணைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். கழிப்பறை வசதிகள் குறைவாக உள்ளதால் பெண்கள் சிரமப்படுவதாக தெரிவித்தனர். மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், அணைக்கு வரும் வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன இடவசதி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com