லடாக் பனிபொழிவில் சிக்கிய டூரிஸ்ட்.. பெண்கள் முதல் குழைந்தை வரை.... காஷ்மீரில் அதிர்ச்சி!!

x

காஷ்மீர் லடாக் பகுதியில் பனிப்பொழிவில் சிக்கித்தவித்த நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். லடாக்கில் உள்ள லே பகுதிக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். கடந்த சில தினங்களாக இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவியது. சாங்க்லா உள்ளிட்ட இடங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனப் போக்குவரத்து முடங்கியது. இதனால் வெளியேற முடியாமல் சிக்கித்தவித்த பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகளை போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். மோசமான வானிலையால் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத்தை ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்