மாந்திரீகத்தின் பெயரில் துன்புறுத்தல் - 5 மாதங்கள் தொடர்ந்த டார்ச்சர்... கணவன் நிகழ்த்திய பயங்கரம்

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த அனிஷ் என்பவர், தனது மனைவியான பாத்திமா என்பவரின் உடலில் பேய் இருப்பதாகக் கூறி, கடந்த 5 மாதங்களாக மாந்தீரிகம் என்ற பெயரில் டார்ச்சர் செய்து வந்துள்ளார். மேலும் தனது உறவினர்களான ஷிபு, ஷானிகா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, பாத்திமாவின் உடலில் இருந்து பேயை விரட்டுவதாக பல்வேறு மூடநம்பிக்கைகளை அனிஷ் மேற்கொண்டு வந்துள்ளார். மேலும், மந்திரவாதிகளான சுலைமான், ஹிமாமுதீன், அன்வர் உசேன் ஆகிய 3 பேர் வரவழைக்கப்பட்டு, பாத்திமாவை கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கணவர் அனிஷ் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com