சரக்கு கேட்டு டார்ச்சர்..தர மறுத்த ஊழியர்களின் மண்டைய பிளந்த ரவுடி கும்பல்..

x

புதுச்சேரி அருகே உள்ள சேதராபட்டில் தனியார் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இரவு மதுபான கடை மூடிய பின் அங்கு வந்த பிரபல ரவுடி சுந்தர் மற்றும் அவரது அடியாட்கள், மது வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு, கடையின் ஊழியர்கள் நேரம் முடிந்து விட்டது காலையில் வருமாறு தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் மதுபான கடை ஊழியர்களை ரவுடி கும்பல் சரமாரியாக தாக்க தொடங்கினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதுபான கடை ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்