உலுக்கி எடுக்கும் கனமழை...உச்சகட்ட அபாயத்தில் யமுனை நதி...உயிரை கையில் பிடித்து ஓடும் மக்கள்

x

டெல்லியில் கனமழை காரணமாக, யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டி தண்ணீர் செல்வதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள், எங்கு பார்த்தாலும், வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன

இந்நிலையில், டெல்லி யமுனை ஆற்றின் நீர் மட்டம் அபாய அளவை தாண்டி செல்கிறது. அணையின் நீர்மட்டம் 207 மீட்டரை நெருங்கி வரும் நிலையில், கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், ஹிமாச்சலத்தில் இருந்து ஹரியானா வழியாகவும் தண்ணீர் வருவதால் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்