தமிழ்நாட்டில் இருந்து டன் டன்னாக கேரளாவிற்கு செல்லும் கனிம வளங்கள்... கனரக வாகனங்களால் கதிகலங்கும் மக்கள்

x

கற்கள், பாறைகள் சல்லிகளையும் ஏற்றிக்கொண்டு லாரிகள் சாரசாரையாக நிற்கும் இவ்விடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தமிழகம் - கேரளா எல்லையான களியக்காவிளை... கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் தினசரி கனரக வாகனங்களில் செல்கிறது.

இப்படி செல்லும் வாகனங்களால் சாலையில் செல்லவே அச்சமாக இருக்கிறது என்கிறார்கள் பொதுமக்கள்...

இரவு பகல் பாராமால் போக்குவரத்து விதிகளை மீறி கனரக வாகனங்களில்அதிக பாரம் ஏற்றி செல்லப்படுவதாக சொல்கிறார்கள். 10 டயர் லாரிகளில் லாரி எடை உள்பட 28 டன்னும், 12 டயர் லாரிகளில் 35 டன்னும், 14 டயர் லாரிகளில் 42 டன்னும், 16 டயர் லாரிகளில் 48 டன் பாரமும் ஏற்றிச் செல்லாம் என்ற நிலையில், இப்போது லாரிகளில் 70 டன்னுக்கு மேல் பாரம் ஏற்றிச் செல்லப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த வாகனங்களால் ஆபத்து காலங்களில் ஆம்புலன்ஸ் கூட வரமுடியவில்லை என்கிறார்கள்

கனரக வாகனங்கள் செல்வதால் சாலைகள் பாதிக்கப்படு வதாகவும், சாலையோர குடிநீர் குழாய்கள் உடைபடுவதாக வும், தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.

குமரியின் அண்டைய மாவட்டமான தென்காசியிலும் ஆலங்குளம், கடையம், முக்கூடல், கடையம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கனரக வாகங்களில் நாள்தோறும் கேரளாவுக்கு கனிம வளங்கள் செல்கிறது. அங்கும் இதே பிரச்சினையை எதிர்க்கொள்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்...

(சங்கரன் கோவில் செய்தியாளர் விசுவல் அனுப்பியிருக்கிறார். சாலையில் கனரக வாகனங்கள் வரிசையாக நிற்கும் காட்சிகள்... புழுதி பறக்க வாகனங்கள் செல்லும் காட்சி)

செங்கோட்டை புளியரை சோதனை சாவடியிலும் அதிக பாரம் ஏற்றி கனரக வானங்கள் எந்நேரமும் செல்வதாகவும் சொல்கிறார்கள். குவாரிகள் சகட்டுமேனிக்கு தோண்டப்படுவதாகவும், இதனால் தென்காசி மாவட்டம் பாலைவனமாகும் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்கள்..

பாறைகள் வெடிப்பால் கட்டிடங்கள் குலுங்குகிறது, புழுதி பறப்பதால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது என குவாரிகள் செயல்படும் கிராமங்களில் பொதுமக்கள் தொடர்ந்து கவலை தெரிவிக்கிறார்கள். இயற்கை வளம் செல்வதுடன் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படும் சூழலில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் பொதுமக்கள் முன்வைக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்