புனித காவிரி நீரில்.. டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்... அச்சத்தில் மேட்டூர் மக்கள்

x

மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதற்கு, கடும் வெயிலே காரணம் என மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மாதையன்குட்டை , நாட்டாமங்கலம் செக்கானூர் ஆகிய காவேரி ஆற்றங்கரை பகுதிகளில், டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதக்கின்றன. இதன்காரணமாக அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருகிறது. மீன்கள் செத்து மிதப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆலைகளின் கழிவுநீரும், மேட்டூர் அனல் நிலைய கழிவுநீரும் காவிரியில் கலப்பதே மீன்கள் இறந்து மிதக்க காரணம் என மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் இதனை மறுத்துள்ள மீன்வளத்துறை அதிகாரிகள், கடும் வெப்பம் காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்