தக்காளி படுத்தும் பாடு..வியாபாரியின் அசத்தலான செயல் "இப்படியும் ஒரு மனுஷனா..!""நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்ல எனக்கு"

x

கடந்த சில நாட்களாக தக்காளி விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகி வரும் நிலையில், கடலூரில் ஒரு வியாபாரி வெறும் 20 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது...

கடலூரை பொறுத்தவரை அதிகப்படியாக 95 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி நேற்று வரை விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் செல்லங்குப்பம் பகுதியில் வியாபாரி ராஜேஷ் தக்காளியை வெறும் 20 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். இதனால் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தக்காளியை வாங்கிச் செல்கின்றனர். கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து தக்காளி கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தனக்கு கிலோ 60 ரூபாய்க்குக் கிடைத்த நிலையில், மக்களுக்கு சேவை செய்யும் விதமாக 20 ரூபாய்க்கு விற்பதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்