4 தசாப்தங்களாக ஹாலிவுட்டை ஆளும் டாம் க்ரூஸ்... 60ஐத் தொட்டும் 20களுக்கு டஃப் கொடுக்கும் வரும் ஹாலிவுட் நாயகன்...
40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் இன்று தனது 60வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ஸ்டண்ட் காட்சிகளுக்காகத் கற்பனைகூட செய்ய முடியாதளவிற்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் டாம் க்ரூஸ், ஒரு மிகச்சிறந்த சாகச வீரர்... விமானத்தில் இருந்து தொங்குவது... உலகின் மிக உயரமான கட்டட உச்சியில் அச்சமின்றி நிற்பது... மலை உச்சியில் இருந்து பைக்கில் குதிப்பது... என்று இவரது சாகசங்கள் எண்ணிலடங்காதவை... Rain Man, MISSION: IMPOSSIBLE, TOP GUN, RISKY BUSINESS, என பல வெற்றிப் படங்களைத் தந்துள்ள டாம் க்ரூஸ், 60ஐத் தொட்டும் 20 வயது இளைஞரை விட தோற்றத்திலும், செயல்பாட்டிலும் இளமை ததும்ப வலம் வருகிறார்...
Next Story
