கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் இறங்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 28 ஊழியர்கள் பணிநீக்கம் செய்வதாக நிர்வாகம் அறிவிக்கபட்டது. இதை அடுத்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கடந்த ஒன்றாம் தேதி முதல் 26 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று அவர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமெனவும், நிறுத்தி வைக்கப்பட்ட போனஸையும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்