கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்

x

கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் நேற்று 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்றும் அதே விலைக்கு விற்கப்படுகிறது.

சில்லறை விற்பனையில் 120 ரூபாய் வரை விற்கப்பட வாய்ப்புள்ளது...

100 ரூபாயாக இருந்த பீன்ஸ் விலை 10 ரூபாய் குறைந்து 90 ரூபாயாக விற்கப்படுகிறது...

அதே சமயம் சின்ன வெங்காயத்தின் விலை 130 ரூபாயாகவும், இஞ்சியின் விலை 270 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

உருளை, மாங்காய் 35 ரூபாய்க்கும், ஊட்டி கேரட் 60 ரூபாய்க்கும், பெங்களூர் கேரட், கர்நாடக பீட்ரூட், புடலங்காய், முருங்கை, காலிஃப்ளவர், வெள்ளரி 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

ஊட்டி பீட்ரூட், முள்ளங்கி, வெண்டை, வரி கத்திரி, எலுமிச்சை 40 ரூபாய்க்கும், உஜாலா கத்திரி 45 ரூபாய்க்கும், பாகற்காய் 65 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

பட்டாணி விலை180 ரூபாயாகவும், பூண்டு விலை 170 ரூபாயாகவும், அவரை விலை 50 ரூபாயாகவும், வாழைப்பூ விலை 20 ரூபாயாகவும், கருவேப்பிலை விலை 20 ரூபாயாகவும், தேங்காய் விலை 27 ரூபாயாகவும் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்