இன்றைய தலைப்பு செய்திகள் (29-03-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

​நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய புகாரில், காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட்...

காவல் நிலையங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்களில், அரசு எந்த சமரசமும் மேற்கொள்ளாது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று விளக்கம்...

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு...

வாக்கு எண்ணிக்கை, மே 13ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு....

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க அவசரம் இல்லை எனவும் விளக்கம்...

Gpay, Phone Pay உள்ளிட்ட யு.பி.ஐ செயலிகள் மூலமான பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் இல்லை...

வேலட்களில் 2 ஆயிரம் ரூபாய்க்கும் மேலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே, 1 புள்ளி1 சதவீதம் கட்டணம் என என்.பி.சி.ஐ. இன்று விளக்கம்...

மேகதாதுவில் அணை கட்ட துடிக்கும், கர்நாடகா அரசின் முயற்சியை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை....

தமிழக அரசின் நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் இன்று தகவல்...

வேங்கைவயல் சம்பவம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம்...

2 மாதங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும், சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு...

அதானி விவகாரம், ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிப்பு உள்ளிட்டவற்றை முன்வைத்து நாடாளுமன்றத்தில் இன்றும் தொடர் அமளி....

இரு அவைக​ளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு...


Next Story

மேலும் செய்திகள்