இன்றைய தலைப்பு செய்திகள் (23-06-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மக்களவை தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகள் திட்டம்...

பாட்னாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் இன்று முடிவு...

2வது சுற்று ஆலோசனை கூட்டம் சிம்லாவில் நடைபெறும் எனவும் அறிவிப்பு...

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்...

தேச நலனை கருத்தில் கொண்டே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளதாக, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று பேட்டி...

பொது தேர்தல் அறிக்கையை தயார் செய்வது குறித்து ஆலோசித்ததாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தகவல்...

சர்வாதிகார அரசுக்கு முடிவு கட்டுவதே தங்கள் நோக்கம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசம்...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நிறைவடையும் ஜூன் 28ஆம் தேதி, காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்த வாய்ப்பு...

அமலாக்க துறை காவலில் எடுக்காததால், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை...

"ஆதனின் பொம்மை" நாவலை எழுதிய எழுத்தாளர் உதயசங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது இன்று அறிவிப்பு...

'திருகார்த்தியல்' என்ற சிறுகதை தொகுப்புக்காக எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது...

சேலம் சின்னப்பம்பட்டியில் நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இன்று திறந்து வைத்தார், கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்...

தான் பெற்றதை சமூகத்திற்கே திருப்பிக் கொடுக்கும் நடராஜனின் எண்ணம், தனக்கு கூட தோன்றவில்லை என புகழாரம்...

தனது பள்ளிக்கால கனவு, இன்று நனவாகியுள்ளது என நடராஜன் நெகிழ்ச்சி...


Next Story

மேலும் செய்திகள்