இன்றைய தலைப்பு செய்திகள் (20.07.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

இன்றைய தலைப்பு செய்திகள் (20.07.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines
x

வரிப்பணம் வீண் - நீதிமன்றம் கண்டனம்

நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றி இருந்தால், "வட்டி" என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் விரயம் ஆகாது...

அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது? என்றும் நீதிமன்றம் கேள்வி...

நிலவை நெருங்கியது சந்திரயான்-3

புவி சுற்றுவட்டப்பாதையில் 4-வது முறையாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது சந்திரயான்-3 விண்கலம்....

அடுத்த சுற்றுக்கு உயர்த்தும் பணி வரும் 25ம் தேதி பிற்பகல் நடைபெறும் என இஸ்ரோ தகவல்...

விலைவாசி உயர்வு - அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி, அதிமுக ஆர்ப்பாட்டம்...

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மூத்த தலைவர்கள் பங்கேற்பு...

வரலாற்றில் முதன் முறையாக பெண் எம்.பி.க்கள் நியமனம்

மாநிலங்களவை துணைத் தலைவர் குழுவுக்கு 4 பெண் எம்.பி.க்கள் நியமனம்...

வரலாற்றில் முதன்முறையாக, மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தங்கர் நடவடிக்கை...

மணிப்பூர் விவகாரம் - நாடாளுமன்றம் முடக்கம்

மணிப்பூர் மாநில விவகாரத்தை விவாதிக்கக் கோரி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி...

இரு அவைகளும் நாளை வரை, ஒத்தி வைப்பு...

"பிரதமர் அறிக்கை தர வேண்டும்"

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற அவையில், பிரதமர் மோடி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்...

திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா வலியுறுத்தல்...

ரூ.1000 - விண்ணப்பம் விநியோகம்

மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்ப விநியோகம் துவக்கம்...

சென்னையில் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கிய ரேஷன்கடை ஊழியர்கள்


Next Story

மேலும் செய்திகள்