இன்றைய தலைப்பு செய்திகள் (20-06-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தகவல்...
விசாரணையில் இருந்து தப்பிக்க செந்தில் பாலாஜி நாடகம் ஆடுகிறார் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு...மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது தமிழ்நாடு, தமிழ் மற்றும் இந்தியாவுக்கு கேடு...
கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆவேசம்...
பெண்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுத்தவர் கருணாநிதி என, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் புகழாரம்...
செந்தில்பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்...
சென்னையில் பாஜக சாதனை விளக்க கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பரபரப்பு குற்றச்சாட்டு...
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் தொடர்வதாகவும் பேச்சு..
கடந்த அதிமுக ஆட்சியில் உயர்த்தப்படாத சாலை வரியை திமுக அரசு உயர்த்துவதாக, எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் கண்டனம்....
மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உண்டாக்கி உள்ளதாகவும் இன்று அறிக்கை...
மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார், பிரதமர் நரேந்திர மோடி...
இந்தியாவின் உச்சபட்ச முன்னுரிமை, அமைதி என்பதில் உலக நாடுகள் முழு நம்பிக்கை கொண்டு உள்ளது...
வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில், பெருமிதம்
