இன்றைய தலைப்பு செய்திகள் (17/11/2022) | 7 PM Headlines

x

உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினரை வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.....பிரியாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி....

இடஒதுக்கீடு மட்டும் இல்லையென்றால் எந்த ஒரு தலித்தும் எம்.பி., எம்.எல்.ஏ., ஆகியிருக்க முடியாது...ஓட்டுக்காக தான் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிக்கு வருகிறார்கள் என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேச்சு...

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இறப்புக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்...மருத்துவ துறையை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி...

மறு உத்தரவு வரும் வரை, வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.....வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு உத்தரவு....

தூத்துக்குடி அருகே பள்ளி மாடியில் இருந்து குதித்து 11ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி....கருப்பு உருவம் தன்னை குதிக்க வற்புறுத்தியதாக, திகிலூட்டும் வாக்குமூலம்....

"பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்களின் நியமனம் செல்லாது"சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.....

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு ரத்து...அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்...


Next Story

மேலும் செய்திகள்