இன்றைய தலைப்பு செய்திகள் (16-08-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக வரும் 20ஆம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்படும் என திமுக இன்று அறிவிப்பு...

அதிமுக மாநாட்டை மறைக்கவே அதே நாளில் திமுக போராட்டம் நடத்துவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு...

காலை உணவுத் திட்டத்ம் விரிவாக்கத்திற்கு சுய உதவிக்குழுவை பயன்படுத்த திட்டம்...

புதிதாக பத்தாயிரம் மகளிர் குழுக்கள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு...

இமாச்சல பிரதேசம், உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி 66-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு இன்று ஆய்வு...

பத்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்...

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், ஐ. ஏ.எஸ் அதிகாரி ஜான் லூயிஸ் தலைமையில் அதிகாரிகள் இன்று ஆய்வு...

அதிமுக ஆட்சியில் சரியாக திட்டமிடாததே கிளாம்பாக்கம் வெள்ள பாதிப்புக்கு காரணம் என அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு...


Next Story

மேலும் செய்திகள்