இன்றைய தலைப்பு செய்திகள் (14/01/2023)

x

சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் மூன்று முறை காட்சி அளித்தார் சுவாமி ஐயப்பன்...

மகர ஜோதியை காண சபரிமலையில் 2 லட்சம் பக்தர்கள் திரண்டனர்...

பாரம்பரிய நகைகளை அணிந்து ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்தார் சுவாமி ஐயப்பன்...கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதால் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்...

ஐயப்பன் கோவில் சன்னிதியில் நடிகர்கள் ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்டோர் தரிசனம்...மகரஜோதி நாளில் சரண கோஷம் எழுப்பி பக்தர்கள் உற்சாகம்...

ஐயப்பன் கோயிலுக்கு சென்ற திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன்...5 வயது முதலே சபரிமலைக்கு வருவதாக விக்னேஷ் சிவன் தகவல்...

தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் திருநாள் கொண்டாட்டம்..."தமிழ்நாடு வாழ்க" என இல்லங்களில் கோலமிட்டு தைத் திருநாளை வரவேற்போம் என முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் உள்ளிட்டோர் வாழ்த்து...

புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது...களம் காண 800 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் தயார்...


Next Story

மேலும் செய்திகள்