இன்றைய தலைப்பு செய்திகள் (12-01-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்...

திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாட்டின் கடலோர பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்...

50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தகவல்...

சாதக பாதகங்களை ஆராய்ந்த பின்னர் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்...

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கோரிக்கை...

ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் நிறைவேற்றினால் ஆதரிப்பதாக, பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேச்சு...

அரசியல் சாசனத்தை மீறி செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உரிய அறிவுரைகளை வழங்கவேண்டும்...

குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை இன்று நேரில் சந்தித்து திமுக குழு வலியுறுத்தல்...

ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியை, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு...

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்பு...

வெளிநாடுகளில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதிய திட்டம் விரைவில் அறிமுகம்...

அயலக தமிழர் தின விழா நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு...

பொங்கல் திருநாளை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் இயக்கம் இன்று முதல் துவக்கம்...

ஒரு லட்சத்து 64 ஆயிரம் பேர் இதுவரை முன்பதிவு செய்துள்ளதாக, போக்குவரத்து துறை தகவல்...


Next Story

மேலும் செய்திகள்