இன்றைய தலைப்பு செய்திகள் (10-05-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

கர்நாடகாவில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு...

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்...

குறைந்த வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் எனவும் கணிப்பு...

3 அமைச்சர்களின் இலாகா மாற்றம்?

தமிழக அமைச்சர்களில் 3 பேரின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக இன்று தகவல்...

புதிய அமைச்சராக நாளை பொறுப்பேற்கிறார் டி.ஆர்.பி., ராஜா...

கேரளாவில் தனக்கு சிகிச்சை அளித்த இளம் மருத்துவரை போலீசார் முன்னிலையில் இன்று குத்திக்கொன்ற விசாரணை கைதி...

போலீசாரிடம் துப்பாக்கி இல்லையா? என கேள்வி எழுப்பி கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்...

மருத்துவர்களை பாதுகாக்க முடியாவிட்டால் மருத்துவமனைகளை மூடுங்கள் எனவும் காட்டம்...

கேரளா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், நாளை வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவிப்பு...

பெண் மருத்துவர் படுகொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று உறுதி...

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது, முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு வழக்கு...

எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு...


Next Story

மேலும் செய்திகள்