இன்றைய தலைப்பு செய்திகள் (01-06-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

டெல்லி அரசின் அதிகார விவகாரத்தில் ஆதரவு கோரி, முதலமைச்சர் ஸ்டாலின் உடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்திப்பு...

மத்திய அரசு கொண்டுவந்த அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...

மாநிலங்களவையில் அவசர சட்டம் நிறைவேறாமல் தடுக்க, எதிர்க்கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்...

மேகதாது விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இன்று திட்டவட்டம்...

தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது எனவும் பேட்டி...

எவ்வித சமரசம் செய்தாலும், அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் துரைமுருகன் உறுதி...

இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு உணவுப்பொருள் மற்றும் வழங்கல் துறை அதிரடி உத்தரவு...

வியாபாரிகள் உள் நுழைவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எனவும் இன்று அறிவிப்பு...

சிங்கப்பூர், ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவுறுத்தல்...

தமிழகத்தில் கலை அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்...

வரும் 22ஆம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு...

மணிப்பூர் கலவரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதித்துறை ஆணையத்தை அமைக்க அரசு முடிவு...

ஆளுநர் தலைமையில் அமைதிக் குழு அமைக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்