காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-12-2023)

x
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின், நேரில் ஆய்வு...மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு...
  • தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, பெருமழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு...தூத்துக்குடியில் ஏரல், ஸ்ரீவைகுண்டம், காயல்பட்டினத்தில் நிலைமை மோசமாக உள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்..
  • தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆறாயிரம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும்...தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...
  • வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...சேதமடைந்த குடிசைகள், வீடுகள், நெற்பயிர்கள், கால்நடைகள் உள்ளிட்டவற்றிற்கும் நிவாரண உதவிகளை அறிவித்தார்...
  • சென்னை வெள்ளம், தென் மாவட்ட வெள்ளம் ஆகியவற்றை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்கவில்லை, நிதியும் வழங்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...தமிழகத்தில் நேரிட்ட 2 பெரிய வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்ததாகவும் விளக்கம்...
  • அடிக்கடி டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான நிதி பெற்றுத்தர வேண்டும்...முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்...

Next Story

மேலும் செய்திகள்