நாசாவின் முதல் ஸ்பேஸ் ஷட்டில் விண்கலமான கொலம்பியா, விண்ணில் ஏவப்பட்ட தினம் இன்று.

x


1969ல் சந்திரனில் மனிதர்களை முதன் முதலாக தரையிறக்கி சாதனை படைத்த அமெரிக்கா, அதன் பிறகு விண்வெளி ஆராய்ச்சிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியது. விண்கலங் களை விண்ணில் செலுத்த பயன்படுத்தப்படும் பிரம்மாண்ட மான ராக்கெட்டுகள், விண்கலன்களின் பெரும் பகுதி ஒரு முறை மட்டும் பயன்படுத்தத் தக்க வகையில் வடிவமைக்கப் பட்டன.

மீண்டும், மீண்டும் பயன்படுத்தத் தக்க விண்கலம் மற்றும் ராக்கெட்டுகளை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டது. இதன் மூலம் விண்வெளி பயணங்களுக்கான செலவுகளை கணிசமாக குறைக்க முடியும் என்பதால் இந்த முயற்சியை மேற்கொள்ள தொடங்கினர்.

பிரம்மாண்டமான சரக்கு விமானத்தின் வடிவில் கொலம்பியா என்று பெயரிடப்பட்ட ஸ்பேஸ் ஷட்டில் வின்கலத்தை தயாரிக்கும் பணிகள் 1975ல் தொடங்கியது. நாசா விண்வெளி நிறுவனத்திற்காக, ராக்வெல் இன்டெர்நேசனல் என்ற தனியார் நிறுவனம் இதை உருவாக்கியது.

ஸ்பேஸ் ஷட்டில் விண்ணில் செலுத்தப்படும் போது, அதன் வெளிப்புறத்தில் இரண்டு பூஸ்டர் ராக்கெட்டுகள் மற்றும் ஒரு பிரம்மாண்ட எரிபொருள் டேங்க் இணைக்கப்பட்டன. எரிபொருள் டேங்க்கில் உள்ள திரவ ஹைடரஜன் மற்றும் திரவ ஆக்சிஜன், கொலம்பியாவின் மூன்று எஞ்சின்களுக்கான ஆரம்ப கட்ட எரிபொருள் தேவையை பூர்த்தி செய்தது.

பூமியின் சுற்று வட்டப் பாதையை கொலம்பியா அடைந்த பின், பூஸ்டர் ராக்கெட்டுகள் மற்றும் எரிபொருள் டாங்க் ஆகியவை கழட்டி விடப்பட்டு கடலில் விழச் செய்யப்பட்டன. பூஸ்டர் ராக்கெடுகளை, மீட்பு கப்பல்கள் மூலம் மீட்டு, மீண்டும் பயன்படுத்த வகை செய்யப்பட்டது. எரிபொருள் டாங்க் கடலில் மூழ்கடிக்கப்பட்டது.

1981 ஏப்ரலில் முதல் முறையாக விண்ணில் ஏவப்பட்ட கொலம்பியா ஸ்பேஸ் ஷட்டில், 22 வருடங்களில் மொத்தம் 28 முறை பயன்படுத்தப்பட்டது.

விண்வெளி பயணத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய கொலும்பியா ஸ்பேஸ் ஷட்டில் விண்கலம், முதல் முறையாக விண்ணில் ஏவப்பட்ட தினம்,1981, ஏப்ரல் 12.


Next Story

மேலும் செய்திகள்