புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும், மின் பொறியாளருமான நிக்கோலா டெஸ்லா மறைந்த தினம் இன்று.....

x

1856ல் செர்பியாவில் ஒரு பாதிரியார் குடும்பத்தில் பிறந்த நிக்கோலா டெஸ்லா, இளம் வயதிலேயே விஞ்ஞான பரிசோதனைகளில் ஆர்வம் காட்டினார். ஆஸ்த்ரியாவின் இம்பீரியல் ராயல் டெக்னிகல் கல்லூரியில் சேர்ந்து, பொறியியல் பயின்றார்.

ஆனால் மூன்று ஆண்டுகளில், பட்டம் பெறாமல் வெளியேறி னார். 1881இல் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரின் தொலை பேசி இணைப்பகத்தில் மின் பொறியியலாளராக பணியில் சேர்ந்தார்.

1884ல் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்த டெஸ்லா, தாமஸ் ஆல்வா எடிசனின் மின் விநியோக நிறுவனத்தில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றினார்.

டி.சி மின்சாரத்தை பயன்படுத்தி எடிசன் நிறுவனம் மின் விநியோகம் செய்து வந்தது. அதில் இருந்த குறைபாடுகள், சிக்கல்களை உணர்ந்த டெஸ்லா, இன்று உலகெங்கும் பயன்படுத்தப்படும் ஏ.சி மின்சார விநியோக முறையை உருவாக்கி பெரும் புகழ் பெற்றார். ஏ.சி மோட்டர் மற்றும் ஜெனரேட்டர்களை உருவாக்கி, அவற்றிற்கு காப்புரிமை பெற்றார்.

பின்னர் கூட்டளிகளுடன் இணைந்து சொந்த நிறுவனம் தொடங்கிய டெஸ்லா, ஏ.சி மின் உற்பத்தி மற்றும் விநியோகத் தை முன்னெடுத்து, பெரும் சாதனை படைத்தார். அவரின் கண்டுபிடிப்புகள் மின்சாரத் துறையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தி, மலிவு விலையில், பல லட்சம் அமெரிக்க வீடுகளுக்கு மின்சார சேவைகளை அளிக்க வகை செய்தது.

இவர் உருவாக்கிய நீர் மின்சார தொழில்நுட்பம் மூலம், நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து உயர் அழுத்த மின்சாரம் உற்பத்தி செய்து பல மைல் தூரத்திற்கு அதைக் கொண்டு செல்ல முடிந்தது. இதன் மூலம் அமெரிக்கத் தொழிற்துறை வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார்.

கம்பியில்லா முறையில், மின்சாரத்தை கடத்த ஒரு தொழில் நுட்பத்தை உருவாக்க, பெரும் தொகையை செலவு செய்து தோல்வியடைந்தார். உலகெங்கும் சுமார் 300 கண்டுபிடிப்பு களுக்கு பேடன்ட் காப்புரிமை பெற்றார். இவரை கெளரவிக்கும் வகையில் மின் காந்த அலைகளின் அடர்த்தியின் அலகிற்கு டெஸ்லா என்று பெயரிடப்பட்டுள்ளது. 86 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானர்.

மின் பொறியியல் துறை மற்றும் பல்வேறு துறைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி, அழியாப் புகழ் பெற்ற நிக்கோலா டெஸ்லா, மறைந்த தினம், 1943 ஜனவரி 7.


Next Story

மேலும் செய்திகள்