உலக அளவில் பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்த தினம் இன்று

x

உலக அளவில் பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்த தினம் இன்று.

ஆயிரக்கணக்கான வருடங்களாக மனித குலத்தை அச்சுறுத்தி வந்த கொடூரமான தொற்று நோய்களில், பெரிம்மை நோய் முதல் இடத்தில் இருந்தது. பல நூறு கோடி பேர் இதற்கு பலியாகியுள்ளனர்.

3,500 வருடங்களுக்கு முன்பு எகிப்த்தில் பெரியம்மை பரவியுள்ளது பற்றிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பிரமிட்களில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மம்மிகளில் சிலவற்றில் பெரியம்மையின் தாக்கம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

உடல் முழுவதும் கொப்பளங்கள் உருவாகி, கடுமையான வேதனை ஏற்படுத்தும் பெரியம்மை நோய், வரியோலா என்ற வைரஸ் மூலம் பரவுவதை பின்னர் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வரியோலா வைரஸ் மூலம் பெரியம்மை நோய்க்கு உள்ளானவர்களில் சுமார் 40 சதவீதத்தினர் உயிரிழந்தனர். 20ஆம் நூற்றாண்டில் மட்டும்

இந்நோயினால், உலகெங்கும் சுமார் 50 கோடி பேர் மரணமடைந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தடுப்புமருந்தை, 16ஆம் நூற்றாண்டில் சீனாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்டு, 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியாவிற்கு பரவியது. 1796ல் பிரிட்டனைச் சேர்ந்த எட்வர்ஜ் ஜென்னர் என்ற விஞ்ஞானி, பெரியம்மை நோய்க்கான நவீன ரக தடுப்பூசியை உருவாக்கி சாதனை படைத்தார். அம்மை நோய் தொற்றிய பசு மாட்டின் ரத்தத்தில் இருந்து, செல்களை எடுத்து, ஆய்வுக் கூடத்தில் வளர்த்து,

அதில் இருந்து பெரியம்மை தடுப்பு மருந்தை வெற்றிகரமாக உருவாக்கினார்.

உலகெங்கும் தடுப்பூசி பரவலான பின், பெரியம்மையின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. 1977இல் பெரியம்மை தாக்கிய கடைசி மனிதராக சொமேலியாவில் ஒருவர் அடையாளம் கண்டறியப்பட்டார்.

அதன் பிறகு பெரியம்மை நோய் தொற்றுதல் எங்கும் பதிவாகவில்லை.

இதைத் தொடர்ந்து ஐ.நாவின் அங்கமான உலக சுகாதார நிறுவனம், 1980, மே 8இல் பெரியம்மை ஒழிக்கப்பட்டு விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.


Next Story

மேலும் செய்திகள்