ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட தினம் இன்று

x

அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று.

1957இல் சவுதி அரேபியாவில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த பின் லேடன், உயர் கல்வியை முடித்த பின், 1979இல் பாகிஸ்தான் சென்றார். சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த ஆப்கானிஸ்தானை விடுவிக்க போராடிய முஜாஹிதின் இயக்கத்தில் இணைந்து போராடினார்.

அரேபிய நாடுகளில் பெரிய அளவில் நிதி திரட்டி, முஜாஹிதின் இயக்கத்திற்கு ஆயுதங்கள் மற்றும் போராளிகளை சேர்த்தார். 1988இல் அல் கொய்தா இயக்கத்தை தொடங்கினார். ஈராக் போரின் போது, சவுதியில் அமெரிக்க ராணுவம் நிலை நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், 1994இல் சவுதி அரேபிய குடியுரிமையை இழந்தார். அங்கிருந்து சூடானுக்கு இடம் பெயர்ந்த பின் லேடன், பின்னர் ஆப்கானிஸ்தானிற்கு மீண்டும் சென்றார்.

அமெரிக்காவிற்கு எதிராக போர் பிரகடனம் செய்த பின் லேடன், அமெரிக்க தூதரங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்தினார். 2001செப்டம்பர் 11இல், அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இரட்டை கோபுர தாக்குதலை முன்னெடுத்து, 3,000 பேரின் மரணத்திற்கு காரணமானர்.

பின் லேடனை பிடிப்பதற்காக 2001 அக்டோபரில், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தது. ஆப்கானிஸ்தானை விட்டு தப்பி சென்ற பின் லேடனை பிடிப்பதற்காக, அமெரிக்கா தீவிர முயற்சி எடுத்தது.அவரின் தலைக்கு இரண்டரை கோடி டாலர் விலை வைத்தது.

இறுதியாக, பத்தாண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானின் அபோட்டாபாத் பகுதியில், ஒரு பண்ணை வீட்டில் பின் லேடன் பதுங்கியிருப்பதை அமெரிக்க உளவுத் துறை கண்டு பிடித்தது. 2011இல் ஹெலிகாப்டர் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து சென்ற அமெரிக்க சீல் படையினர்,

நள்ளிரவில் அந்த பண்ணை வீட்டில் தரையிறங்கி, பின் லேடனை சுட்டுக் கொன்றனர். பின்னர் அவரின் உடலை ஹெலிகாப்டர் மூலம் ஆப்கானிஸ்தானிற்கு எடுத்துச் சென்று, அவரின் அடையாளத்தை உறுதி செய்தனர்

அமெரிக்காவிற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்த, சர்வதேச பயங்கரவாதி பின் லேடன் கொல்லப்பட்ட தினம், 2011 மே 2.


Next Story

மேலும் செய்திகள்