இந்திய விடுதலைக்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று

x

1897ல் ஒடிசா மாநிலம் கட்டாக்கில், வங்காள குடும்பத்தில் பிறந்த சுபாஷ் சந்திர போஸ், பாப்டிஸ்ட் மிசன் ஆரம்பப் பள்ளியில் பள்ளி கல்வி பயின்றார்.

கொல்கத்தா மாநில கல்லூரியிலும், பின்னர் ஸ்காட்டிஷ் கல்லூரியிலும் தத்துவம் பயின்றார்.

1919ல் கொல்கொத்தா பல்கலைகழக தேர்வுகளில் இரண்டாவது மாணவராக தேர்ச்சி பெற்று, இளங்கலை பட்டம் பெற்றார்.

1920ல் பிரிட்டன் சென்று கேம்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் சேர்ந்தார்.

இந்தியாவிற்கான ஐ.சி.எஸ் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றார்.

ஆனால் அந்த வாய்ப்பை தூக்கியெறிந்து விட்டு இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு அதிர் வலைகளை ஏற்படுத்தினார்.

1921ல் இந்தியா திரும்பிய போஸ், மகாத்மா காந்தியை சந்தித்து, இந்திய விடுதலை போராட்டம் குறித்து பல கேள்விகளை எழுப்பினார்.

பின்னர் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து, சித்தரஞ்சன் தாஸின் தொண்டராக, தீவிரமாக பணியாற்றினார்.

சுவராஜ் என்ற பத்திரிக்கையை தொடங்கி நடத்தினார்.

1925ல் விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்றதற்காக கைது செய்யப்பட்ட போஸ், மியான்மருக்கு அனுப்பப்பட்டு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டார்.

1927ல் விடுதலை செய்யப்பட்ட போஸ், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.

1930ல் கொல்கொத்தாவின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1930களின் மத்தியில் ஐரோபிய நாடுகளுக்கு பயணம் செய்தார்.

1938ல் காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ், காந்தியின் அகிம்சை வழிமுறைகளை நிராகரித்ததால், இருவருக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்தன.

1939ல் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த போஸ், ஃபார்வார்ட் பிளாக் கட்சியை தொடங்கினார்.

இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பின், 1941ல் ஆப்கானிஸ்தான் வழியாக ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார்.

இந்திய விடுதலைக்கு ஹிட்லரின் உதவியை நாடிய போஸ், 1943ல் ஜப்பானிற்கு சென்றார். ஜப்பானியர்கள் உதவியுடன், சிங்கபூரில் இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தார்.

இதில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இணைந்தனர்.

அசாம் மற்றும் இதர வட கிழக்கு மாநிலங்கள் மீது ஜப்பானிய ராணுவம் படையெடுத்த போது, இந்திய தேசிய ராணுவம் அதனுடன் இணைந்து போரிட்டது.

ஆனால் போரில் தோல்வியடைந்ததால், பின் வாங்க வேண்டிய நிலை உருவானது.

1945 ஆகஸ்ட் 18ல் தைவானில் இருந்து விமானம் மூலம் ரஷ்யாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போஸ், விமான விபத்தில் உயிரிழந்தார்.

நேதாஜி என்று புகழப்படும் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம், 1897, ஜனவரி 23.


Next Story

மேலும் செய்திகள்