தமிழ் திரைபடங்களை இயக்கிய அமெரிக்கரான எல்லிஸ் ஆர் டங்கன் பிறந்த தினம் இன்று

x

1909ல் அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் பார்ட்டன் என்ற ஊரில் பிறந்த டங்கன், இளம் வயதிலேயே புகைபடக்

கலையில் தேர்ச்சி பெற்றார். பள்ளிக் கல்வி முடித்த பின், தெற்கு கலிபோர்னியா பல்கலைகழகத்தில் திரைபடத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.

கல்லூரியில் டங்கனுடன் படித்த மாணிக் லால் டாண்டன் என்ற இந்தியர், அவரை இந்தியாவிற்கு அழைத்து வந்து, இந்திய திரைபட துறையில் அறிமுகப்படுத்தினார். கொல்கொத்தாவில் தயாரிக்கப்பட்ட நந்தனார் என்ற தமிழ் படத்தில் உதவி இயக்குனராக டங்கன் பணி புரிந்தார்.

அவரை சென்னைக்கு அழைத்து வந்த மருதாச்சலம் செட்டியார் என்ற தயாரிப்பாளர், 1936ல் சதி லீலாவாதி படத்தை இயக்க வாய்ப்பளித்தார். இப்படத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அறிமுகம் ஆனார்கள். படம் நன்றாக ஓடியதைத் தொடர்ந்து, டங்கனுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன.

அவர் இயக்கிய சீமந்தினி, இரு சகோதரர்கள், அம்பிகாபதி , சகுந்தலை ஆகியவை வெற்றி பெற்றன. தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி ஒரு வருடத்திற்கும் மேல் தொடந்து ஓடி சாதனை படைத்தது. தமிழ் மொழி தெரியாவிட்டாலும், ஆங்கிலம் அறிந்த இந்திய உதவியாளர்களின் மூலம் நடிகர்களிடமும், தொழிற்கலைஞர்களோடும் டங்கன் உரையாடினார்.

எம். எஸ்.சுப்புலட்சுமியின் நடிப்பில் டங்கன் இயக்கிய மீரா அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, அந்த படத்தை 1947ல் இந்தியிலும் இயக்கினார். ஒளியமைப்பில் புதிய உத்திகள், நவீன ஒப்பனை முறை, நெருக்கமான காதல் காட்சிகள் ஆகியவை டங்கன் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய சில மாற்றங்கள். மேடை நாடகங்களின் பாதிப்பில் இருந்து தமிழ் திரைபடங் களை விடுபடச் செய்தார்.

அக்காலத்தில், இவரது படங்களில் இடம் பெற்ற நெருக்கமான காதல் காட்சிகள் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அமெரிக்கக் கலாச்சாரத்தைத் தமிழகத்தில் பரப்புகிறார் என்று சிலர் குறை கூறவும் செய்தனர். டங்கன் இயக்கிய கடைசித் தமிழ்ப்படம் எம்.ஜி.ஆர் நடித்த மந்திரி குமாரி. 1950ல் டங்கன் அமெரிக்கா திரும்பினார்.

2001ல், தனது வது 92 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.




Next Story

மேலும் செய்திகள்