ஏராளமான வெற்றி படங்களை அளித்துள்ள இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பிறந்த தினம் இன்று...

x

ஏராளமான வெற்றி படங்களை அளித்துள்ள இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பிறந்த தினம் இன்று.

1958ல் திருவள்ளூர் மாவட்டம் வங்கனூரில் பிறந்த ரவிக் குமார், சென்னை வேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்த ரவிக்குமார், பின்னர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான புது வசந்தம் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினார்.

1990ல் ஆர்.பி.செளத்திரி தயாரிப்பில் வெளியான புரியாத புதிர் படத்தை இயக்கி, தனது வெற்றி பயணத்தை தொடங்கினார்.

இவரின் இயக்கத்தில், சரத்குமார் முதன் முறையாக கதாநாயகனாக நடிக்க சேரன் பாண்டியன் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

கிராமத்து திரைப்படங்கள் எடுப்பதில் எக்ஸ்பர்ட் என்று சொல்லும் அளவுக்கு கே.எஸ்.ரவிகுமாரை பேச செய்தது நாட்டாமை.

இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த நடிப்பில் இவர் இயக்கிய முத்து படம் மெகா ஹிடானது.

கமலஹாசனுடன் கூட்டணி அமைத்து, அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் என்று அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார்.

ரஜினி, சிவாஜி நடிப்பில், இவர் இயக்கிய படையப்பா, பெருநகர் தொடங்கி பட்டி தொட்டியெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது . இதில் ஒரு பாடல் காட்சியில் ரஜினியுடன் தோன்றி கலக்கியிருப்பார் கே.எஸ்.ரவிக்குமார்.

ரஜினி, கமலை தொடர்ந்து விஜய், அஜீத், சூர்யா ஆகிய அடுத்த தலைமுறை நடிகர்களையும் இயக்கி சாதனை படைத்தார்.

தமிழ் திரைப்பட உலகில் முத்திரை பதித்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பிறந்த தினம், 1958, மே 30.


Next Story

மேலும் செய்திகள்