பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸ் பிறந்த தினம் இன்று.

x

1948ல் லண்டலில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் பிறந்த இளவரசர் சார்லஸ் சீம் மற்றும் கோர்டன்ஸ்டன் பள்ளிகளில் பயின்றார்.

அவரின் தாயார் இரண்டாம் எலிசபத் 1952ல் பிரிட்டன் மகாராணியாக பதவியேற்ற பின், சார்லஸ் பட்டத்து இளவரசரானார். இதை உறுதி செய்யும் வகையில்1958ல் அவருக்கு வேல்ஸ் இளவரசர் பட்டம் அளிக்கப்பட்டது.

1970ல் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் வரலாறு மற்றும் தொல்பொருள் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். பிரிட்டன் ராஜ குடும்ப வரலாற்றில், பல்கலைகழகபட்டம் பெற்ற முதல் பட்டத்து இளவரசர் என்ற பெருமை பெற்றார்.

1971ல் பிரிட்டனின் விமானப் படையில், போர் விமானங்களை இயக்க பயற்சி மேற்கொண்டார். ஜெட் விமானங்களை திறமையாக இயக்கி, விமானப் படையின் சான்றிதழ் பெற்றார்.

பின்னர் பிரிட்டன் கடற்படையில் சேர்ந்து, பல்வேறு போர் கப்பலில்களில் பணியாற்றினார். 1974ல் ஹெலிகாப்டார்

ஓட்ட பயிற்சி பெற்றார். 1976ல் ஹெச்.எம்.எஸ் பிரானிங்டன் என்ற போர் கப்பலின் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். பின்னர் கடற்படையில் இருந்து விலகினார்.

1981ல் இளவரசி டயனாவை மணந்தார். வில்லியம் மற்றும் ஹாரி என்ற மகன்கள் அவர்களுக்கு பிறந்தனர். ஆனால் 10 ஆண்டுகளில் தம்பதிகள் இருவரும் பிரிந்தனர். 1996ல் இருவரும் விவகாரத்து பெற்றனர். 1997 ஆகஸ்ட்டில் பாரிஸில் நடந்த சாலை விபத்தில் இளவரசி டயானா மரணமடைந்தார்.

2005ல் கமிலா பார்க்கரை சார்ல்ஸ் மணந்தார். கமீலா பார்க்கர் ஏற்கனவே மணமாகி, விகாரத்து பெற்றவர் என்பதால், இது சர்ச்சைக்குள்ளானது.

பல்வேறு உலக நாடுகளுக்கு அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொண்ட சார்லஸ், சுற்றுச்சூழல், நகர திட்டமிடல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.

கட்டுமான திட்டங்கள் பற்றி 1987ல் ஒரு நூல் எழுதியுள்ளார்.பழம் பெரும் கட்டங்களை சீர் செய்து, மீட்டெடுப்பத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். சுற்றுசூழல் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை அதிகரிக்க முயற்சிகளை தொடர்கிறார்.

2022 செப்டம்பரில் அவரின் தாயார் ராணி எலிசபத் மரணமடைந்த பின், 73 வயதில் பிரிட்டனின் மன்னரானர்.

பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸ் பிறந்த தினம், 1948, நவம்பர் 14.


Next Story

மேலும் செய்திகள்