இன்று குரூப் 2 முதன்மை தேர்வு | TNPSC | tnpsc group 2

x

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 - ல் நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கான முதன்மை தேர்வை இன்று 55 ஆயிரத்து 71 பேர் எழுதுகின்றனர்.

குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ ஆகிய பிரிவுகளில், 5 ஆயிரத்து 446 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

இந்த இடங்களுக்கான முதன்மைத் தேர்வினை 27 ஆயிரத்து 306 ஆண்களும், 27 ஆயிரத்து 764 பெண் தேர்வர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 55 ஆயிரத்து 71 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

இவர்களுக்காக 20 மாவட்டங்களில் 186 இடங்களில் 280 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சென்னை மாவட்டத்தில் 32 இடங்களில் 38 அறைகளில் 8 ஆயிரத்து 315 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

காலை 9:30 மணி முதல் 12 30 மணி வரை தமிழ் கட்டாய தகுதி தேர்வு விரித்துரைக்கும் வகையில் நடைபெறுகிறது.

அதன் பின்னர் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை பொது அறிவுக்கான தேர்வு நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்