ரட்சகர் அவதரித்த தினம் - இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை...

x

ஒரு பண்டிகை ஊரையே வண்ணமயமாக்கும்.. அந்த உற்சாகம் எல்லாரையும் தொற்றிக் கொள்ளும்.. அப்படி ஒரு பண்டிகை தான் கிறிஸ்துமஸ்...

ஜிங்கிள் பெல்ஸ்.. ஜிங்கிள் பெல்ஸ் என பாடல்கள் ஒரு பக்கம், வீடெங்கிலும் நட்சத்திரங்கள், குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் என வண்ணமயமான ஒரு பண்டிகை தான் கிறிஸ்துமஸ்...

மக்களின் பாவங்களை போக்க மனிதராக அவதரித்து வந்த இயேசு கிறிஸ்துவின் வருகையை கொண்டாடும் ஒரு பண்டிகை தான் இது...

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பாலஸ்தீனத்துக்கு உட்பட்ட பெத்லகேம் என்ற சிறிய ஊரில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவர் இயேசு கிறிஸ்து..

சூசையப்பர் - மரியாளின் மகனாக இறைவனின் தூதுவராக வந்த இயேசு கிறிஸ்து பிறந்தார்.. நிறைமாத கர்ப்பிணி மனைவியை அழைத்து சென்ற போது விடுதியில் இடம் கிடைக்காததால் மாட்டுத் தொழுவத்தில் அவதரித்தார் மனித குல மீட்பர்...

அவரின் வருகையை அறிந்து வானில் தோன்றிய நட்சத்திரங்களும் ஏதோ ஒரு அதிசய நிகழ்வை சுட்டிக் காட்டியதாக வரலாறு கூறுகிறது...

எளிமையின் அடையாளமாக பிறந்த இயேசுவின் பிறப்பு அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு முதலில் அறிவிக்கப்பட்டது. குழந்தையை வணங்க தேடி வந்த அவர்கள், பாலகனாக இருந்த தூதுவனின் அழகில் மெய்மறந்து பாடல்கள் பாடி மகிழ்ந்தனர்.. இதை எல்லாம் உலகத்திற்கு உரைக்கிறது பைபிள்..

பண்டிகையின் நோக்கமே பகிர்ந்து கொள்வது தான் என்பதற்கேற்ப இயேசு கிறிஸ்துவின் வருகையை கொண்டாடியது ஒட்டு மொத்த பெத்லகேமும்..

கிறிஸ்துமஸ் பண்டிகையன்று கேக் வழங்கியும், வீடுகளில் நட்சத்திரங்கள் தொங்க விட்டும், குடில்கள் அமைத்தும், கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்தும் கொண்டாடுவது வழக்கம்..

இயேசு பிறந்த பெத்லகேம் முழுக்கவே டிசம்பர் மாதத்தில் கோலாகலமாக காட்சி தரும்.. பல நாடுகளில் இருந்தும் தேடி வந்து இயேசு பிறந்த இடத்தை பார்த்து வழிபட்டு செல்வோர் ஏராளம்...

கிறிஸ்துமஸ் பண்டிகையின் மற்றொரு சிறப்பு சாண்டா கிளாஸ்.. கேட்டதை பரிசாக தருவார் என கிறிஸ்துமஸ் தாத்தா குறித்த கதைகளும் ஏராளம்.. குழந்தைகளை மகிழ்விக்கும் ஒருவராக சாண்டா கிளாஸ் இன்றும் கொண்டாட்டத்தில் இடம் பெறுகிறார்...

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகளும் நடத்தப்படுவது வழக்கம். பகிர்வும், மகிழ்வும் கொண்டாட்டமே என்றிருக்க வேததூதன் அவதரித்த இந்த நாளை மகிழ்வோடு கொண்டாடுவோம்..


Next Story

மேலும் செய்திகள்